கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் இணைந்து திட்டம் தீட்டிய சிங்களர் ஒருவரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சேவின் முதல் எதிரியாக விடுதலைப் புலிகள் கூறப்பட்டு வந்த நிலையில் சிங்களர்கள் மத்தியிலேயே அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து இந்த கொலையை நிறைவேற்ற சிங்களர் ஒருவர் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
ராஜபக்சேவின் சொந்த ஊரான மதமலுனா அல்லது தங்கல்லே என்ற இடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து ராஜபக்சேவைத் தீர்த்துக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இததொடர்பான விரிவான விவரம்...
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் கவுன்சிலர் டேனி ஹிததீயக என்பவர் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்ம துஷா லட்சுமண்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதி அம்பலமானது.
ராஜபக்சேவை மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக கொழும்பு நகரின் புறநகரான வெள்ளவத்தையில் மே 14-ம் தேதி தற்செயலாக நடந்த ஒரு சோதனையின்போது புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப்படை அங்கி சிக்கியது.
அப்போது அந்த வீட்டிலிருந்த ஓர் இளைஞர் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார். மேற்கொண்டு துப்பு கிடைக்காமல் திணறியப் போலீஸருக்கு மதுஷா லட்சுமண் தெரிவித்த தகவல்கள் சதியை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சமன் சந்தனா என்ற சிங்களரின் சகோதரர் எச். ரூவான். இவர் இலங்கை ராணுவத்தில் பணிபுரிந்தார். 2000-வது ஆண்டில் விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு ரூவான் காணாமல் போய்விட்டார். அவர் என்ன ஆனார் என்று இலங்கை ராணுவம் சமன் சந்தனாவுக்குத் தகவல் தரவில்லை.
இதனால் கோபமும் சோகமும் அடைந்த சமன் சந்தனா அதிபரின் உதவியை நாடினார். ஆனால் அவர் உரிய பதில் தரப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் மதுஷா லட்சுமண், சந்தனாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய சகோதரர் காணாமல் போன விஷயம் குறித்து அவர் லட்சுமணிடம் கூறி வருத்தப்பட்டார். விடுதலைப் புலிகளில் சிலரை எனக்குத் தெரியும் அவர்களை அறிமுகப்படுத்துகிறேன், அவர்கள் மூலம் நீங்கள் உங்கள் சகோதரர் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று லட்சுமண் அவரிடம் தெரிவித்தார்.
இதை அடுத்து வவுனியாவில் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த ஜூட் என்பவரிடம் சந்தனாவை அறிமுகப்படுத்தினார் லட்சுமண். அதன் பிறகு சந்தனாவுக்கு உதவி செய்வதாக வாக்களித்த விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையைச் சேர்ந்த புலிகளுக்கு கொழும்பில் மறைவிடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பதில் கோரிக்கை விடுத்தனர். அதை சந்தனா ஏற்றுக் கொண்டார்.
சந்தனா தன்னுடைய சகோதரர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டாரா என்று அறிய கிளிநொச்சிக்கு புலிகளின் உதவியோடு சென்றிருக்கிறார். அப்போது இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையாக போர் நடந்துகொண்டிருந்தது.
அதன் பிறகு தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வெள்ளவத்தையில் மேல்தட்டு சிங்களர்கள் குடியிருக்கும் பகுதியில் விடுதலைப் புலிகள் தங்கிக்கொள்ள சந்தனா வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில்தான் தாமோதரம் பிள்ளை சுஜீந்திரன் என்ற விடுதலைப்புலி தங்கியிருந்தார். அவருடைய நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்த சில சிங்களர்கள் போலீஸாருக்கு ரகசியமாக துப்பு கொடுத்தனர்.
போலீஸார் அந்த குடியிருப்பு வளாகத்தைச் சூழ்ந்துகொண்டு வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தியபோது சுஜீந்திரன் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வீட்டின் மேல் மாடியில், தற்கொலைப் படை வீரர்கள் அணியும் 4 மேல்சட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் வெடிகுண்டுகளை நிரப்பித்தான் தற்கொலைப்படையினர் தாக்குவது வழக்கம்.
இந்த நிலையில், தெற்கு மாகாணக் கவுன்சிலர் கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணைக் கைது செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து லட்சுமணை இந்த மாதம் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூடுதல் மாஜிஸ்திரேட் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டிருக்கிறார்.
அவரை கொழும்பு குற்றப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்துத் தீவிரமாக விசாரிக்கவுள்ளனர். ராஜபக்சேவைப் பிடிக்காத சிங்களர்கள் தனிக் குழுவாக இயங்கி ராஜபக்சேவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்கப்படவுள்ளது.
Saturday, August 15, 2009
ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment