முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Saturday, September 12, 2009

இலங்கை சிறைகளில் 91 பேர் மர்ம சாவு

கொழும்பு: இலங்கை சிறைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 91 பேர் மர்மமான முறையில் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது போன்ற கொடுமைகள் இலங்கையில் நடப்பது இது முதல் முறை அல்ல.

1983ல் குட்டிமணி, ஜெகன் போன்ற தமிழ் போராளிகள் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் வெளிக்கடை மற்றும் மேகசின் சிறையில் இலங்கை போலீஸாரால் அடித்தே கொல்லப்பட்டனர்.

2000ல் பின்டெனுவாவே சிறையில் 28 தமிழ் கைதிகளின் உயிர் கொடுரமான முறையில் பறிக்கப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் இறுதியில் இரண்டு இளைஞர்கள் இலங்கை சிறையில் மர்மமான முறையில் இறந்தனர்.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் உறுப்பினர் லட்சுமண் நிருபனாராச்சி கேள்வி எழுப்பினார். அதில்,

மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடக்கும் இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனை பேர் சிறையில் மர்மமான முறையில் பலியாகியுள்ளனர் என கேட்டார்.

அதற்கு அரசு கொறடா தினேஸ் குணவர்தனே அளித்த பதில்,

கடந்த 4 ஆண்டில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் மட்டும் மர்மமான முறையில் இறந்தவர்கள் 32 பேர். அதில் சிலர் போலீஸாரை தாக்க முயன்ற காரணத்துக்காக அடித்து கொல்லப்பட்டனர் என மிகவும் சாதாரணமாக தெரிவித்தார்.

கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment