முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Saturday, August 8, 2009

இலங்கையிலிருந்து படகு மூலம் நியூசி. செல்ல முயன்ற 32 தமிழர்கள் கைது

கொழும்பு: இலங்கையிலிருந்து படகு மூலமாக நியூசிலாந்து தப்பிச் செல்ல முயன்ற 32 தமிழர்களை இலங்கை கைது செய்துள்ளது.

நீர்கொழும்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றையடுத்து நீர்கொழும்பில் உள்ள சீடுவா என்ற இடத்தை காவல்துறையினர் புதன்கிழமை இரவு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைவிடங்களில் இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகில் புறப்படுவதற்காக கடற்கரையில் உள்ள மற்றொரு ரகசியமான இடத்துக்குச் செல்வதற்காக படகு உரிமையாளரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது இரவு எட்டரை மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், 10 பேர் மன்னார், 8 பேர் அம்பாறையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அனைவரும் படகு உரிமையாளருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

படகு உரிமையாளர் தப்பி விட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து பெரும் திரளான தமிழர்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். முன்பு தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள். ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும், தூர கிழக்கு நாடுகளுக்கும் அவர்கள் அலை அலையாக சென்றவண்ணம் உள்ளனர்.

கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த 55 இலங்கைத் தமிழர்களை இந்தோனேசிய கடல் பகுதியில் வைத்து அந்த நாட்டு போலீஸார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்

No comments:

Post a Comment