முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Saturday, July 11, 2009

* தமிழர்களிடம் சிங்களத்தை புகுத்தும் இலங்கை

கொழும்பு: போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறேன் என்ற பெயரில் தற்போது அவர்களிடம் இலங்கை அரசு சிங்கள மொழியை புகுத்தி வருகிறது.

இலங்கையில் போர் என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் செய்த அட்டூழியத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். தற்போது சுமார் 3 லட்சம் தமிழர்கள் முகாம்களில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் போரின் போது பிடிபட்ட 300 விடுதலைப் புலிகளை இலங்கை அரசு, கொழும்பில் இருந்து சுமார் 260 கிமீ., கிழக்கில் இருக்கும் வெலிகண்டா அரசு மறுமலர்ச்சி முகாமில் தங்க வைத்துள்ளது. அவர்களூக்கு தச்சு, வீடு கட்டுதல், தையல், சமையல் உள்ளிட்ட சில தொழில்களை கற்று கொள்ள உதவி வருவதாக கூறுகிறது.

அவர்களுக்கு கம்யூட்டர் மற்றும் ஆங்கில பயிற்சியும், அதோடு சேர்ந்து சிங்களமும் கற்று தரப்படுவதாக பெருமிதம்பட்டு கொள்கிறது.

மறுவாழ்வு மையத்தை சுற்றி சிங்கள ராணுவம் காவல் காக்கிறது. இது போல் மேலும் பல மறுவாழ்வு மையங்களை திறந்து அதில் இறுதி கட்ட போரின்போது கைது செய்யப்பட்ட மேலும் 3000 புலிகளை சேர்க்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தில் இருக்கும் விடுதலை புலிகளின் கிழக்கு பகுதி கமாணடோவாக இருந்த தேவநாயகம் சங்கர் என்ற 29 வயது இளைஞர் கூறுகையில்,

தலைவர் இல்லாத நிலையில் தற்போது இங்கு வழி நடத்தி செல்ல ஆளில்லை. அதனால் சரணடைய நேரிட்டது. மறுவாழ்வு திட்டம் முடிந்த பின்னர் வெளிநாட்டில் சென்று வாழ நினைக்கிறேன். இங்கே எங்களால் வாழ முடியாது என்றார்

No comments:

Post a Comment