கொழும்பு: தமிழர்களுக்கு செய்து வரும் நிவாரணப் பணிகளின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்ய கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதித்தது இலங்கை அரசு.
இறுப்பினும் சில குறிப்பிட்ட முகாம்களுக்கு மட்டுமே செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான காம்கள் பக்கம் போக அனுமதி இல்லை.
இந்த நிலையில், தங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாம் இலங்கை அரசு.
இதன் விளைவாக கிழக்கு மாகாணத்திலிருந்து தங்களது வெளிநாட்டு பணியாளர்களை வாபஸ் பெற்றுள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கூறுகையில், போர் முடிவடைந்து விட்டதால் உங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் பணியில் ஈடுபட்டிருந்த எங்களது வெளிநாட்டு ஊழியர்களைத் திரும்பப் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment