கொழும்பு: இலங்கை அரசு தனது அமைதிச் செயலகத்தை மூடி விட்டது. மேலும் அனைத்துக் கட்சிக் குழுவின் ஆயுள் காலமும் நேற்றோடு முடிந்து விட்டது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் இந்த அமைதி செயலகம் ஈடுபட்டிருந்தது. தற்போது போர் முடிந்து விட்டதால் இதனை மூடி விட கடந்த மாதம் அரசு முடிவு செய்தது. அதேபோல அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைத்து விட முடிவு செய்யப்பட்டது. அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார்.
கடந்த வாரம் தனது கடைசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இக்குழு நடத்தியது. அப்போது அமைதிச் செயலகத்திற்கும், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு அமைதிச் செயலகம் உருவாக்கப்பட்டது. இதேபோல புலிகள் அமைப்பின் சார்பிலும் ஒரு அமைதிச் செயலகம் தொடங்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை இந்த செயலகங்கள்தான மேற்கொண்டு வந்தன.
தற்போது புலிகள் அமைப்பு இலங்கையில் செயலிழந்து விட்டது. இலங்கை அரசும் தனது செயலகத்தை மூடி விட்டது.
Sunday, August 2, 2009
அமைதி செயலகத்திற்கு இலங்கை அரசு மூடுவிழா
Labels:
all party committe,
closure,
ltte,
peace secretariate,
srilanka,
war
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment