முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Monday, July 6, 2009

இலங்கையில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்

கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களில் சில, தங்களது ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்தது.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கணிசமான முஸ்லீம்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதி இருந்தபோது முஸ்லீம்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக கூறப்பட்டது.இதையடுத்து முஸ்லீம்களில் சிலர் தங்களது சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை கையில் எடுத்தனர்.

பின்னர் புலிகள் அமைப்பு இப்பகுதியிலிருந்து விரட்டப்பட்டவுடன், இந்த முஸ்லீம் ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை பெருகியது. கருணா மற்றும் அரசுக் குழுக்களுடன் இணைந்தும் இவர்கள் செயல்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தற்போது போர் முடிந்து விட்டதால் இனிமேல் யாரும் ஆயுதங்களை வைத்திருக்க் கூடாது, சரணடைய வேண்டும் என ராணுவம் உத்தரவிட்டது.ஆனால் யாரும் சரணடைய முன்வரவில்லை.
ஆயுதங்களையும் ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு அரசும், ராணுவமும் கெடு விதித்தன. பொது மன்னிப்பும் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், ஆயுதக் குழுக்களில் ஒரு தரப்பினர் சனிக்கிழமை மாலை போலீஸாரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தன்குடி என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாகாண முஸ்லீம் மசூதிகள் அமைப்பின் மூலமாக இந்த ஆயுத ஒப்படைப்பு நடந்தது.இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அனைவரும் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வர வேண்டும் என டிஐஜி எடிசன் குணதிலகே கூறினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகையில், புலிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள நான் 600 துப்பாக்கிகளை முஸ்லீம் இளைஞர்களுக்குவழங்கினேன்.

மறைந்த அதிபர் பிரேமதாசாவிடமிருந்து இவற்றைப் பெற்று விநியோகித்தேன். இவற்றை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் நாங்கள் ஒருபோதும் மோதியதில்லை. புலிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தினோம் என்றார் அவர்.
இதற்கிடையே, இன்னும் ஆயுதங்களை ஒப்படைக்காமல் இருக்கும் முஸ்லீம் குழுக்களைக் கண்டுபிடித்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய ராணுவம் விரைவில் நடவடிக்கையில் இறங்கப் போகிறதாம்.
நன்றி தட்ஸ் தமிழ்

No comments:

Post a Comment