கொழும்பு: முகாம்களில் உள்ள அகதிகளுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவியுள்ளதாகவும். அவர்களை கண்டுபிடித்து முற்றிலும் அழிக்கும் வரை முகாம்களில் உள்ள மக்களை சொந்த ஊருக்கு போக விட மாட்டோம் என்றும் இலங்கை கூறியுள்ளது.
இலங்கையில் போர் பகுதியில் இருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் ராணுவ அகதி முகாம்களில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 6 மாதத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்போம் என்று அதிபர் ராஜபக்சே கூறினாலும் அந் நாட்டு மனித உரிமைத்துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே இதற்கு எதிர்மறையாகப் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நாங்கள் அகதி முகாம்களில் உள்ள மக்களின் நலனில் மட்டுமல்லாமல் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. எனவே தான் இடம் பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்பத்தப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ள அகதிகளுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து முற்றிலும் அழிக்கும் வரை முகாம்களில் உள்ள மக்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்.
முகாம்களில் உள்ளவர்களில் சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என 9,000 பேர் இதுவரை வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 14,000 பேர் முகாமுக்குள்ளேயே தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ரோகித-எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை:
இந் நிலையில் தாய்லாந்து நாட்டின் புகெட் நகரில் நேற்று நடந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளின் வெளிவுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகமாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழர் பிரச்சனையில் எல்லா வகையிலும் உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல நாங்கள் அனுமதி அளித்தும் அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர்களில் பலர் தொடர்ந்து முகாம்களிலேயே தங்கி இருப்பதாக பொகல்லகாமா தெரிவித்தார்.
No comments:
Post a Comment