முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Sunday, June 28, 2009

தமிழ் எம்.பிக்களின் சுதந்திரத்தைப் பறிப்பது நல்லதல்ல - ரணில்



கொழும்பு: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சுதந்திரமாகச் செயற்படும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் இந்த நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவர். நாடாளுமன்றம் மீது நம்பிக்கையற்ற இன்னொரு புதிய குழு உருவாகிவிடும் என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.


இலங்கை நாடாளுமன்றத்தில் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. பத்மநாதனுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், நெருக்கடியான ஒரு காலகட்டத்தில்தான் பத்மநாதன் எம்.பியாகி இந்த நாடாளுமன்றுக்கு வந்தார். அவர் ஜனநாயகத்தை மதித்து நின்றவர். அவர் நாடாளுமன்றத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.நாடாளுமன்றத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று நினைத்திருந்த ஒரு காலகட்டத்தில்தான் அவர் நாடாளுமன்றம் நுழைந்தார். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் செயற்பட்டார். மக்களுக்குத் தன்னால் முடிந்த சேவையைச் செய்யும் நோக்கில் அவர் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றார்.


நாடாளுமன்றத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றம் வந்திருக்கின்றனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்படும் உரிமை வழங்கப்படல் வேண்டும். அப்படியானதொரு நிலைமை ஏற்படா விட்டால் தமிழ் மக்கள் இந்த நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடுவர் என்றார் அவர்.

No comments:

Post a Comment