ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று தமிழின ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.
இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.
திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.
பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச போர்க் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதனை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.
இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது.
No comments:
Post a Comment