கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழப் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ராணுவம் தள்ளி வருவதாகவும், இளைஞர்களை ரகசிய இடங்களுக்குக் கொண்டு சென்று அடைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் தி ஆஸ்திரேலியன் இதழ் கூறியுள்ளது.
இதுகுறித்து நிவாரணப் பணியாளர்கள் உள்ளிட்டோரை மேற்கோள் காட்டி தி ஆஸ்திரேலியன் வெளியிட்டுள்ள செய்தி..
முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களின் நிலையும் மோசமாக உள்ளது.
புலிமோடை என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பெண்களை ராணுவத்தினர் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளி வருகின்றனர். ராணுவ அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக உள்ளனர்.
இந்த அக்கிரமச் செயல் குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் ஒரு குடிலில் மூன்று குடும்பத்தினர் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால் அத்தனை பேரும் தங்குவதற்கு அந்த இடம் போதுமானதாக இல்லை.
வசதியாக தங்க விரும்பினால் அல்லது அடிப்படை வசதிகள் தேவை என்றால் ராணுவத்தினருக்கு லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும்.
பொகல்லகாமாவின் திமிர் பதில்...
இந்தப் புகார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, ராணுவத்தினர்தான் போரை வென்றவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒவ்வொரு தமிழப் பெண்ணையும் கற்பழித்திருக்க முடியும்.
ஆனால் அவர்கள் யாரையும் கற்பழிக்கவில்லை. விபச்சாரத்தில் தள்ளுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இருந்தாலும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
முகாம்களில் ஆண்களும், பெண்களும், குடும்பத்தினரும் பிரித்தே வைக்கப்பட்டுள்ளனர். பல இளைஞர்களை, இளம் பெண்களை ராணுவத்தினர் விசாரரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.
முகாமுக்குள் யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது. மீறி செயல்பட முடிந்தால் ராணுவத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
முகாம்களில் உள்ள 80 சதவீதம் பேரை இந்த ஆண்டுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி விடுவோம் என அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதாகவே கருதுகிறோம் என்று கூறியுள்ளார் ஐ.நா. மனித உரிமைப் பிரிவு அதிகாரி நீல் புருனே.
நன்றி தட்ஸ் தமிழ் இணையம்
*** நெருப்பூ கவிதை *** தமிழ் சினிமா **** புத்தகங்கள் *** சிறுகதைகள் *** ஈழ நெருப்பூ *** கந்தகப் பூக்கள் சிற்றிதழ் ***
No comments:
Post a Comment