முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Monday, June 1, 2009

இனிவரும் நாட்கள் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் அபாயமிக்கதாகவே இருக்கும்

கடந்த சில வாரங்களாக நாளாந்தம் வெளியான தமிழர்களுக்கு எதிரான பலவிதமான செய்திகள் பாடாய்ப்படுத்தி விட்ட நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் செய்திகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இருப்பினும் அந்த செய்திகளில் பலவிதமான ஐயப்பாடுகள் தவிர்க்க முடியாமல் எஞ்சியிருக்கின்றன.
பேசிப் பேசி ஓய்ந்து விட்டோம். அப்படியிருக்கலாம் இப்படியிருக்கலாம் என்ற லாம்கள் கேள்விக்குறிகளாக இருக்கின்றன. பொது இடங்களில் பேசுவதனை தவிர்த்து விட்டாயிற்று.
நம்பிக்கைக்குரியவர்கள் கூடும் தமிழர்களுக்கான தனி இடங்களில் மட்டும் கூடி அக்கம் பக்கம் எவரேனும் இருக்கின்றார்களா என்று நன்கு அவதானித்து விட்டு கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அடுத்ததாக என்ன நடக்கும் என்ற கேள்விக்கு பலவிதமான ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. பின்னர் இவற்றுக்கெலாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எமக்குள் நாமே ஆறுதல் தேடிக்கொள்கின்றோம். பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இனி அவர்களினால் தலையெடுக்கவே முடியாது என்ற அரசாங்கத்தின் கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், கொழும்பில் பாதுகாப்பு கெடுபிடிகளில் தளர்வில்லை. சோதனைச் சாவடிகளில் படையினர் மத்தியில் உற்சாகம் பெருக்கெடுக்கவில்லை. மேகங்கள் சூழும் இராப்பொழுதுகளில் எல்லாம் புலிகளின் விமானம் பறக்கின்றதா என்று இராட்சத டோர்ச் வெளிச்சம் பீய்ச்சப்பட்டு சோதிக்கப்படுகின்றது. புலிகளை தோற்கடித்த அமர்க்களமான கொண்டாட்டங்கள் ஓய்ந்து விட்டன. எனினும் இந்த இதர செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சிங்களப் பத்திரிகைகளில் மட்டும் படையினரின் சாதனைகளினாலும், புலிகளின் வீழ்ச்சி விபரங்களினாலும் பக்கங்கள் நிரப்பப்படுகின்றன. ஈழத்தின் வீழ்ச்சி (டுழளவ நுயடயஅ) என்ற தலைப்பில் கடந்த வாரம் சிங்கள வார இறுதிப் பத்திரிகைகள் அனுபந்தங்களைப் பிரசுரித்திருந்தன. இவ்வாரமும் அந்த அலப்பறைகள் தொடர்கின்றன. இப்படியிருக்கும் பொழுது தமிழர்கள் இங்கு ஒருவிதமான மயான அமைதிக்குள் மூழ்கி விட்டுள்ளனர். நம்பிக்கை தரும் விடயங்கள் ஏதேனும் நடைபெறாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. இந்நிலையில் நசுக்கி விடப்பட்டுள்ள தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய சக்திகளாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தொடரும் பலவிதமான போராட்டங்கள் மனதுக்கு உத்வேகத்தினை ஏற்படுத்துகின்றன. கொழும்பில் மற்றும் இலங்கையின் இதர பாகங்களில் மனச்சாட்சி கொண்ட தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்ச மனோபாவமும், வேதனைகளை வெளிக்காட்டி பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளதனையும் உலகத் தமிழர்களும் நன்கறிவர். இந்த நிலையில் உலகத் தமிழர்களின் இந்த புலம்பெயர் போராட்டங்கள் தீவிரமடைந்து விடுதலைப்போராட்டத்தின் இலக்கினை வெகுவிரைவில் அடைய வேண்டும் என்பதே நம் அனைவரினதும் பிரார்த்தனையாகும். இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு பிரார்த்தனைகள் மட்டுமே சாத்தியமாகவிருக்கின்றது என்பதனை உலகத் தமிழர்களும் நன்கறிவர். உலக நியதி என்பது தமிழினத்திற்கு எதிரானதாகவிருக்கும் நிலையில் தமிழர்களுக்கு தமிழர்கள் பாதுகாவலர்களாக இருக்க முடியும். ஒரு காலத்தில் தமிழினத்தினை இந்தியா பாதுகாக்கும் என்ற எண்ணம் அனைத்து தமிழர்களிடமும் இருந்தது. அந்த மாயை களையப்பட்ட நிலையில் சரி உலக நாடுகளும் அதன் மனித உரிமை சாசனங்களும் தமிழர்களைக் காப்பாற்றும் என்றிருந்த அதீத நம்பிக்கையும் இப்பொழுது பொய்த்து விட்டது. இனி தமிழர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்புக்கு உள்ளானாலும் கேட்பாரில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலையையையும், அவர்கள் எதிர்கொள்ளப் போகும் அரசியல் அனர்த்தங்களையும் உலகுக்கு ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் எமது புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. இனிவரும் நாட்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் அபாயமிக்கதாகவே இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. அரசாங்கம் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள், புலிகளுடன் தொடர்புகொண்ட பத்திரிகையாளர்கள் வேட்டையாடப் போகின்றது. வேட்டையாடப்படும் இவர்கள் அனைவரும் அப்பாவி தமிழர்களாகவே இருக்கப் போகின்றார்கள்

நெருடல் இணையத்திற்கு நன்றி

No comments:

Post a Comment